நடிகர் பார்த்திபன் மகளும், உதவி இயக்குநருமான கீர்த்தனாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது. மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சிறுமியாக நடித்த இவருக்கு, வரும் மார்ச் 8ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மகனான அக்ஷயை இவர் மணக்கவுள்ளார். விஜய்சேதுபதி நடித்த பீட்ஷா படத்தை, அக்ஷய் இந்தியில் இயக்கியுள்ளார்.
இவர்கள் இருவருக்கு நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பார்த்திபனை பிரிந்த வாழும், நடிகை சீதா பங்கேற்றார்.