ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரைமைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியமையால், மைத்திரி – ரணிலுக்கு இடையிலான சந்திப்பு அவசரமாக இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமைய தனி அரசாங்கம் ஒன்றை உடனடியாக உருவாக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய அரசாங்கத்திற்கான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற ஒப்பந்தம் கடந்த 31ஆம் திகதி பூர்த்தியாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.
கடந்த ஜனாதிபதி போது மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையே இதற்கு காரணமாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் தனியான கட்சிகளாக செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்தில் தனி அரசாங்கம் உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இரண்டு பிரதான கட்சிகளுக்குமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.