முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் ஊடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்பட்ட போதிலும் அவ்வாறான சம்பவங்கள் ஒன்று பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த தலைமையிலான கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் கோத்தபாயவின் இலங்கை விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.