உண்மை காதலுக்கு இதுவும் சான்று : மனதை உருக்கும் வீடியோ

இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். காதல் என்பது ஒரு உணர்வு பூர்வமனான வலி பல கவிஞர்கள் காதலுக்கு விளக்கமளித்துள்ளனர்.

எவ்வளவு தான் வலியைக் கொடுத்தாலும், இந்த காதலை விரும்பாதவர் யாரும் இல்லை. உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் காதல் என்ற ஒரு உன்னதமான பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்க கூடும்.

அந்தக் காலத்து காதல், இந்தக் காலத்துக் காதல் என பிரித்துப் பார்க்க நான் விரும்பவில்லை. எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா என்பதே முக்கியம்.

மேலும், அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்.

ஆனால், காதலிப்பவர்கள் அனைவரும் கல்யாணம் என்ற ஒரு பந்தத்திற்குள் இணைவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். இன்றளவும் காதலுக்கு எதிர்ப்புகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இதனால், பல காதலர்கள் தற்கொலை என்ற முடிவை நோக்கிச் செல்வதும் உண்டு.

இந்நிலையில், தனது காதலி இறந்துவிட்டதை அறிந்த காதலன் கதறிக் கொண்டு காதலி வீட்டிற்கு சென்று காதலி கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதனை அந்த பெண்ணின் பெற்றோர் தடுத்து நிறுத்தியும், மீறி அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டியுள்ளார்.

இந்த வீடியோவனது, சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் வைரலாகியுள்ளது.