வயதில் மூத்த பெண்களை மணந்த பிரபல ஆண்கள்!

பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் பிரபல ஆண்கள் பலர் தங்களை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

சச்சினை விட அஞ்சலி ஆறு வயது மூத்தவராவார். தம்பதிக்கு சாரா மற்றும் அர்ஜுன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சிரீஷ் குந்தர்.

பிரபல திரைப்பட இயக்குனரான சிரீஷ் குந்தர், இன்னொரு பிரபல பெண் இயக்குனரான பராகானை காதலித்து கடந்த 2004-ல் திருமணம் செய்து கொண்டார்.

சிரீஷை விட பராகான் 8 வயது மூத்தவராவார்.

அபிஷேக் பச்சன்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அபிஷேக் பச்சன், முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராயை கடந்த 2007-ல் திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா ராயை விட அபிஷேக்பச்சனுக்கு 2 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பரான் அக்தர்

நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முக தன்மை கொண்ட பரான் அக்தர், தன்னை விட 6 வயது மூத்தவரான அதுனா பபானி என்ற பெண்ணை கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தனுஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ல் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவை விட தனுஷ் 2 வயது இளையவராவார்.

சைப் அலி கான்

இந்தி திரைப்பட நடிகர் சைப் அலி கான், அம்ரிதா சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் 2004-ல் விவாகரத்து செய்தார்.

கானை விட அம்ரிதா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்துக்கு பின்னர் நடிகை கரீனா கபூரை கான் திருமணம் செய்து கொண்டார்.

 

ராஜ் குந்தரா

ஐபிஎல் கிரிக்கெட் அணி உரிமையாளர் ராஜ்குந்தரா, நடிகை ஷில்பா ஷெட்டியை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராஜ்குந்தராவை விட ஷில்பா ஷெட்டி 3 மாதங்கள் மூத்தவராவார்.

 

ஆதித்யா பாஞ்சோலி

பாலிவுட் நடிகர் ஆதித்யா பாஞ்சோலி, பிரபல நடிகை ஜரினாவை கடந்த 1986-ல் திருமணம் செய்து கொண்டார்.

ஜரினாவை விட ஆதித்யா 6 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.