எப்படி நம் ஒவ்வொருவருக்கும் ராசிகள் உள்ளதோ, அதேப் போல் நம் ஒவ்வொருவருக்குமே சூரிய எண் என்ற ஒரு எண்ணும் உள்ளது. இந்த எண் எப்போதும் மாறாதது. உங்களுக்கு உங்களுடைய சூரிய எண் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
உதாரணமாக, நீங்கள் மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தவரானால், நீங்கள் பிறந்த தேதியான 25 உடன் மே மாதமான 5-ஐ கூட்டினால், 30 வரும். பின் 3 + 0 இரண்டையும் கூட்டுங்கள். இப்போது கிடைக்கும் ஓரிலக்க எண்ணான 3 தான் சூரிய எண்.
மற்றொரு உதாரணமாக, நீங்கள் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி பிறந்தவராக இருந்தால், பிறந்த தேதியான 13 உடன் நவம்பம் மாதமான 11-ஐ கூட்டுங்கள். அப்போது உங்களுக்கு 24 என்ற இரண்டு இலக்க எண் கிடைக்கும். பின் இந்த 2 + 4 இரண்டையும் கூட்டினால் கிடைக்கும் ஓர் இலக்க எண்ணான 6 தான், இந்த நபருக்கான சூரிய எண்.
இப்போது உங்களது சூரிய எண்ணைக் கணக்கிடுங்கள் மற்றும் இந்த 2018 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எண் 1
இந்த எண்ணிற்கு உரியவர்கள் பிப்ரவரி மாதத்தில் எதிர்பாராத பயணம் அல்லது இடமாற்றத்தைக் காண நேரிடும். இந்த மாதத்தில் பல மாற்றங்கள், உற்சாகங்கள் மற்றும் ஒருசில கொப்பளிப்பை உண்டாக்கும் அனுபவங்களை சந்திக்க நேரிடும். தங்கள் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ய எவ்வளவு முயற்சித்தாலும், இந்த மாதத்தில் முடியாமல் போகும். கடந்த இரண்டு வருடங்களாக மனதிற்குள் வைத்திருந்த ஆசைகளை வெளிப்படையாக சொல்ல வேண்டிய தருணம் வரும். மாற்றங்களை கண்டு அஞ்சாமல், துணிச்சலானவர்களுக்கு, இம்மாதம் சந்தோஷமிக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.
எண் 2
இந்த எண்ணைக் கொண்டவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பொறுப்பும், வேலைப்பளுவும் அதிகரிக்கும். தனது திறமைக்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள் மற்றும் இவர்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த மாதத்தில் பிரியமுள்ளவர்கள் மற்றும் அன்பானர்வளுக்காக அதிக நேரத்தையும் ஆற்றலையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் வாழ்க்கை துணையுடனான அன்பும், பிணைப்பும் வலுபெறும்.
எண் 3
இந்த எண்ணிற்கு உரியவர்கள் வாழ்வில் அதிக கவனம் செலுத்துவார்கள். தங்கள் வாழ்க்கையில் ஒரு நிலையான வளர்ச்சியைக் காண, தங்களைச் சுற்றியிருக்கும் முக்கியமான நபர்களை ஈர்க்க நினைப்பார்கள். இந்த நபர்களுக்குரியவர்களின் சுறுசுறுப்பு மற்றும் உற்சாகம், சில நேரங்களில் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக்கும். எனவே இம்மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிறிய ஆரோக்கிய தொல்லைகளால் அவஸ்தைப்படக்கூடும். எனவே உணவுப் பழக்கவழக்கத்தில் சற்று கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
எண் 4
இந்த எண்ணிற்கு உரியவர்கள், இம்மாதத்தில் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு இடையே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த எண்ணிற்குரியவர்கள் தங்கள் ஆற்றலை நடுநிலையாக பராமரிக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் கோபம் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும் மற்றும் உணர்வுகளின் மீது கவனத்தை செலுத்த வேண்டும். இந்த எண்ணிற்கு உரியர்களை வலிமையானவராக்குவதற்கான வாய்ப்புகள் பிப்ரவரி மாதத்தில் தேடி வரும். எனவே குழப்பமான மனநிலையில் இல்லாமல், எப்போதும் தெளிவான மனநிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
எண் 5
5 என்ற எண்ணிற்கு உரியவர்கள், பிப்ரவரி மாதத்தில் ஏராளமான மாற்றங்களை மனதளவிலும் காண்பார்கள். பெரும்பாலும் மனநிலையில் தான் அதிக மாற்றங்களை காண முடியும். இந்த மாதத்தில் தொலைதூர உறவுகளில் இருந்தும் சற்று விலகி இருக்க வாய்ப்புகளுண்டு. மற்றொரு பக்கம், இந்த எண்ணிற்கு உரியவர்கள் வலுவான கருத்து கொண்டவர்களாக, மனிதாபிமானம் கொண்டவர்களாக மற்றும் ஆன்மீக உணர்வுள்ளவர்களாகவும் இருப்பர்.
எண் 6
உங்களது சூரிய எண் 6 என்றால், நீங்கள் முந்தைய மாதத்தை விட இம்மாதம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் மற்றும் இருப்பீர்கள். இம்மாதத்தில் பல நல்ல வாய்ப்புக்களும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும் நன்கு ஆராய்ந்து பின் முடிவெடுங்கள். இந்த எண்ணைக் கொண்டவர்களுக்கு தைரியம், மனஉறுதி மற்றும் மன வலிமை ஆகியவை இம்மாதம் மிகவும் அவசியம்.
எண் 7
இந்த எண்ணிற்கு உரியவர்கள் இம்மாதம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் அடிப்படை காரணிகள் பலவற்றால் விழித்துக் கொள்வார்கள். இந்த மாதத்தில் இவர்களது உள்ளுணர்வு, பல்வேறு வித்தியாசமான கனவுகளைக் காண வைக்கும். இந்த மாதத்தில் இவர்கள் மோதல்களைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் தற்போது தங்களது தேவைகளைப் பாதிக்கின்ற உள்நோக்கங்கள் மற்றும் ஆசைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் நிலையில் இருப்பார்கள்.
எண் 8
சூரிய எண் 8-ஐ கொண்டவர்கள் இம்மாதத்தின் இறுதியில் சமூகத்தில் அனைவருடனும் நன்கு பழகுவார்கள். இவர்களது ஏற்றத்தாழ்வு மனப்பான்மையால் இவர்களைச் சுற்றியிருப்பவர்கள் ஈர்க்கப்படுவர் மற்றும் இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் எதிர்பாராத வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும். இந்த மாதத்தில் பல புதிய புராஜெக்ட்டுகளை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் போடுவார்கள். இவர்களது சுய வெளிப்பாடு மேம்பட்டிருக்கும். இதனால் இவர்கள் தங்களது உணர்வுகள் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளைக் குறித்து மிகவும் சௌகரியமாக பேசுவதைக் காணலாம்.
எண் 9
இந்த எண்ணிற்கு உரியவர்கள், தங்கள் முன்னேற்றம் முற்றிலும் விடாமுயற்சியுடன் செயல்படுவதால் தான் என்பதை உணர்வீர்கள். மேலும் இவர்கள் தங்களால் எதையும், தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்க முடியும் என்பதை உணர வைப்பதோடு, மற்றவர்களின் மெதுவான பதிலால் விரக்தியடைய வைக்கும். இந்த எண்ணைக் கொண்டவர்களுக்கு இம்மாதம் மிகவும் சிறப்பானது. இம்மாதத்தில் இவர்களது நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும்.