தாம் ஓர் அமெரிக்க பிரஜை எனவும் தம்மால் இலங்கையில் பிரதமராக பதவி வகிக்க முடியாது எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்றைய தினம் நாடு திரும்பிய கோதபாய இந்தக் கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோதபாய களமிறக்கப்படுவார் என எதிர்வு கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கோதபாய ராஜபக்ஸவும் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களை முட்டாளாக்கிவிட முடியாது என கோதபாய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.