கடந்த 2 நாட்களாக புதிதான போர் குற்ற ஆதாரம் என்று பல தமிழர்கள் ஒரு வீடியோவைப் பார்த்து அதனை பரப்பியும் வருகிறார்கள். 2 தமிழர்களை கட்டிவைத்து கொடுமை படுத்தி. ஒருவரின் இதயத்தை பிடுங்கி எடுப்பதும். மற்றைய நபரின் கழுத்தை அறுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பின்னால் சிங்கள பாட்டு ஒன்று மெல்லியதாக கேட்க்கிறது. இதனால் இது சிங்கள ராணுவமே செய்தது என்று தமிழர்கள் நம்பி இதனை பார்த்து அதிர்ந்து போய் உள்ளார்கள். ஆனால் இவை அனைத்தும் பொய்… சிங்களத்தின் திட்டமிட்ட சதி வேலை.
குறித்த சம்பவம் மெக்சிக்கோ நாட்டில் நடந்தது. இந்த வீடியோவை எடுத்து. அதில் மெல்லியதாக சிங்கள பாட்டை போட்டு விட்டு. இதனை சிங்கள நாய்கள் தமிழர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். இதனை பார்த்த பல அப்பாவி தமிழர்கள், இது உண்மை என நினைத்து இதனை தமது லோக்கல் MP க்களுக்கு காட்டுவார்கள். MPக்களும் இதனை நம்பக் கூடும். பின்னர் 10 நாட்கள் கழித்து சிங்கள அல்லது ஆங்கில ஊடகங்களில் இது பொய்யான தகவல் என்ற செய்தி வெளியாகி. தமிழர்கள் சொன்னது பொய் என்று கூறுவார்கள்.
இப்படியான பல வேலைத் திட்டங்கள் 210ம் ஆண்டில் இருந்து லண்டனில் உள்ள சில சிங்கள மூளைசாலிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி.