ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது!

ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது என்பதையே உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள வெற்றி தொடர்பாக, நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்த சி்றிலங்காவின் வரைபடத்தை காண்பித்து மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கிறார்.

“ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றியைப் பெற்றிருக்கிறது.

நாடு முழுவதிலும் அரக்கு நியம் (maroon) பரவியுள்ளது. ஈழப் பிரதேசமும் கூட சுருங்கியுள்ளது. இது தான் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பலம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.