மரணத்திற்கே தடை விதித்த நகரம்: வெளியான பகீர்…?

நோர்வே நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்டின் பெரும்பாலானா நாட்களில் கடும் குளிர் நிலவுவதால் இங்கு நோயாளிகள் இறப்பது சட்டவிரோதமென முடிவு செய்துள்ளனர்.

இதனால் இங்குள்ள மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் பல மைல்கள் தொலைவில் இருக்கும் முக்கிய நகருக்கு எடுத்துச் சென்று அங்கு அவர்களது இறுதி நாட்களை கழிக்கச் செய்கின்றனர்.

நோர்வே நாட்டில் உள்ள Longyearbyen கிராமம் பொதுவாக கடும் குளிர் பிரதேசமானதால், இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையானது அன்றாடம் போராட்டமாகவே அமைந்துள்ளது.

இந்த மாதம் இங்குள்ள வெப்ப நிலையானது சராசரியாக -17C என உள்ளது. இது திடீரென சரியவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் புதைக்கப்பட்ட உடல்கள் எதுவும் சிதையாமல் அதேபோன்று உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இப்பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 11 உடல்களில் Spanish flu எனப்படும் நோய்த்தொற்று இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த உடல்கள் 11-ம் 1918 ஆம் ஆண்டு உலகமெங்கும் பரவிய ஒருவகை Spanish flu நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த நபர்களாகும்.

அந்த காலகட்டத்தில் குறித்த நோய்த்தொற்றால் சுமார் 50 முதல் 100 மில்லியன் மக்கள் வரை பலியாகினர்.

கடும் குளிர் பிரதேசமானதால் 100 ஆண்டுகள் கடந்தும் புதைக்கப்பட்டவர்களின் உடலில் இன்னமும் நோயின் தாக்கம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் தற்போதைய சுழலில் நோய் பரவும் அபாயம் இருப்பதையும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.