விலைக்கு சிறுமியை வாங்கி, 2வது திருமணம் செய்த நபர்…

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு சிறுமியை விலைக்கு வாங்கி 2வது திருமணம் செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பெர்லார்மின். இவர் ரூ.1 லட்சத்துக்கு ஒரு சிறுமியை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் குறித்த சிறுமியை திருட்டுத்தனமாக 2வது திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று நாகர்கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் சிறுமி ஒருவரை அடைத்து வைத்து இருப்பதாக, சைல்ட் ஹெல்ப்லைன்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் மற்றும் பொலிசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், அங்கு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் விலைக்கு வாங்கிய அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். இதையறிந்த ராபர்ட் தற்போது தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.