இருபத்தெட்டு வயதே நிரம்பிய லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் (Lizzie Velasquez) ஒரு அமெரிக்கர். உலகின் அவலட்சணமான பெண் இவர் தான் .
லிஸ்ஸி பிறந்தது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில். ரீட்டா மற்றும் க்வாடாலூப் வெலாக்யூஸ் தம்பதியின் மூத்த மகள் லிஸ்ஸி.
பிறக்கும் போது வெறும் 1.219 கிலோகிராம் தான் லிஸ்ஸியின் மொத்த எடை. லிஸ்ஸிக்குப் பிறக்கும் போதே ‘மார்ஃபனாய்ட் – புரோகராய்ட் – லிப்போடிஸ்ட்ரோபி சிண்ட்ரோம்’ எனும் நோய் இருந்திருக்கிறது. இக்குறை காரணமாக லிஸ்ஸியின் உடல் கொழுப்பை சேமிக்கவும், உடல் எடையைக் கூட்டவும் மறுத்தது.
இதையறிந்த அக்கம், பக்கத்தினர், நெருங்கிய உறவினர்கள் எனப் பலர் வெறுத்து ஒதுக்கியுள்ளனர். இருந்த போதிலும், லிஸ்ஸி மனம் தளராமல் டெக்ஸாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூனிகேஷன் ஸ்டடிஸ் எனும் பாடப்பிரிவை பயின்று பட்டம் பெற்றுள்ளார். பிறர் கண்டு ஒதுக்கும் தன்னை கடவுள் உருவாக்கிய உடல் என்று கூறி சமாதானம் கூறிக்கொள்வாராம்.
எத்தனை எதிர்மறை வார்த்தைகளால் தன்னைத் தாக்கினார்களோ அதற்கு நேர்மாறாக ‘ பாசிட்டிவ் வார்த்தைகள்’ மூலம் தன்னைத் திரும்பிப்பார்க்க வைக்கமுடியும் என்று நம்பியுள்ளார் லஸ்ஸி.
இதன்விளைவாகவே, மனிதர்களைத் தன் மந்திரச் சொற்களால் கட்டிப்போடும் மிகப்பிரபலமான தன்னம்பிக்கை பேச்சாளர் ஆகியிருக்கிறார் லிஸ்ஸி.
மேலும், இவருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அமைந்ததால், இவர் மோட்டிவேஷனல் ஸ்பீச் தரும் கூட்டங்களில் குண்டூசி விழுந்தால் கேட்கும் அமைதி மட்டுமல்ல, உற்சாகமும், சந்தோஷமும் கூச்சலும், விசிலும் கரவொலியும் அதிரும்.
”நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல, என் செயல்களைப் பொறுத்ததே. என் பதிலடியை என் தன்னம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் என்னைத்திட்டுபவர்களுக்கும் புறக்கணிப்பவர்களுக்கும் காட்ட விரும்புகிறேன்” என்று கூறும் இந்த அழகின் சிகரமான பேச்சு சொல்கிறது.