சிறுமியை உயிருடன் கொளுத்திய சிறுவன்…!

இந்திய மாநிலம் மத்தியபிரதேசத்தில் வன்புணர்வுக்கு மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் 13 வயது சிறுமியை சிறுவன் ஒருவன் உயிருடன் கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது பக்கத்துத் தெருவை சேர்ந்த 16 வயதான அந்தச் சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான்.

ஆனால் இதற்கு அந்தப் சிறுமி சம்மதிக்காமல் சிறுவனை எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட சிறுவன் குறித்த சிறுமியை பலமாக தாக்கியுள்ளான்.

பின்னர் அந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஊற்றியுள்ளான். அதேபோல் அங்கேயே கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

திடீரென்று தீ பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே புகுந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாயமான சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உடல் முழுவதும் வெந்த நிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிறுமி சிகிச்சைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.