எந்தப் பொருட்களை அர்ச்சனைக்கு உபயோகிக்க கூடாது?

விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம். வாசனை இல்லாதது, வாடியது நுகரப்பட்டது முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, தகாதவர்களால் தொடப்பட்டது; ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம் மாதுளை எலுமிச்சை புளியம்பழம் கொய்யா வாழை நெல்லி இலந்தை மாம்பழம் பலாப்பழம்.அபிஷேகம் ஆடை அணிவிப்பது சந்தன அலங்காரம் நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

அருகிலுள்ள அனாதை இல்லம் முதியோர் இல்லம் கண் பார்வையற்றோர் செவிகேளாதோர் சேவை இல்லங்களுக்கு,  இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும். காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திப்பது சிறந்தது.