பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகக் கூடும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே தற்பொழுது சந்திப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அப்படி பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகலுக்கான முடிவினை எடுப்பாராயின் நாட்டில் பெரும் குழப்பகரமான அரசியல் சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இந்த தகவலை ஜனாதிபதி செயலகமோ அல்லது பிரதமர் செயலகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தத் தகவலை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.