சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளால், நாட்டின் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில், கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன.
இதையடுத்து, கூட்டு அரசாங்கத்துக்குள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு உறுதியற்ற நிலை தோன்றியுள்ளது.
இதனால் சிறிலங்காவின் பங்குச்சந்தையில் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டது. முக்கியமான பங்குகளின் விலைகளில் நேற்று கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
அரசியல் குழப்பநிலையால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கத் தயக்கம் காட்டுவதாகவும் இதனால், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் நேற்று வீழ்ச்சியடைந்துள்ளது.