ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசலில் முட்டி கொம்பன் காளை பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் தென்னூரில் சில நாட்களுக்கு முன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையான கொம்பனும் கலந்து கொண்டது.
யாருக்கும் அடங்காத காளை என புகழாரம் சூட்டப்பட்ட கொம்பன், வாடிவாசலில் இருந்து வெளியே வரும் போது கல்தூணில் மோதியதில் சுருண்டு விழுந்தது.
மயக்கம் அடைந்த காளையை பரிசோதித்த மருத்துவர்கள் காளை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர், மூளையில் ஏற்பட்ட பலத்த அடியே காளையின் மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
புகழ்பெற்ற கொம்பன் காளை மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் புதைக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.