இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்த மகளை சொத்துக்காக மாற்றாந்தாய் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மீனு. இவரின் கணவர் அஜித் சிங் கடந்த 2016-ல் உயிரிழந்துவிட்டார்.
அஜித்சிங்குக்கு மீனு இரண்டாவது மனைவியாவார். இந்நிலையில் அவரின் முதல் மனைவிக்கு பிறந்த பிராப்தி (24) என்ற பெண்ணுடன் மீனு ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
அஜித் சிங்குக்கு ஒரே பெண் என்பதால் அவரின் வீடு உட்பட சொத்துக்கள் அனைத்தும் பிராப்தி பெயரில் உள்ளது.
இந்நிலையில் பிராப்திக்கும், உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் வருண் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.
எல்லா சொத்துக்களும் பிராப்தி பெயரில் உள்ளதால் தனக்கு எதுவுமே கிடைக்காது என பயந்து போன மீனு, அவரை சொத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கடந்த 7-ஆம் திகதி இரவு படுக்கையறையில் பிராப்தி தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கையில் செங்கலுடன் சென்ற மீனு, அவரை தலையில் செங்கலால் பலமாக தாக்கி கொலை செய்தார்.
பின்னர் பிராப்தி சடலத்தை இரு துண்டுகளாக வெட்டி ஒரு பையில் போட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார்.
அடுத்த நாள் வருண் பிராப்தியை போனில் தொடர்பு கொண்ட போது அவர் போன் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பிராப்தி வீட்டுக்கு வந்த வருண் அவர் குறித்து மீனுவிடம் விசாரித்துள்ளார்.
அதற்கு, பிராப்தி டெல்லிக்கு வேலை நேர்முக தெரிவுக்காக போயிருப்பதாக மீனு கூறியுள்ளார்.
ஆனால் மீனு மீது வருணுக்கு சந்தேகம் வந்து அவரிடம் மிரட்டி விசாரித்ததில் நடந்த அனைத்தையும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிராப்தி சடலத்தை கைப்பற்றி மீனுவை கைது செய்துள்ளனர்.