ஒடிசாவை சேர்ந்த மூத்த திரைப்பட நடிகை பர்பதி கோஷ் தனது 85-வது வயதில் காலமானார்.
பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள பர்பதி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை வென்றுள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகதன்மையோடு வலம் வந்த அவர் சில காலமாக வயது முதிர்வு காரணமாக வரும் வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஞாயிறு இரவு உடல் நிலை மோசமானதால் பர்பதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அன்று இரவே அவரின் உயிர் பிரிந்தது.
#Watch: CM Naveen Patnaik pays floral tributes to noted actress Parbati Ghosh who passed away last night #Odisha #OTV pic.twitter.com/AR5TnnSh9y
— OTV (@otvnews) February 12, 2018
பர்பதியின் மரணம் திரையுலகுக்கு பேரிழப்பு என திரையுலகினர் பலர் தங்களது இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் பர்பதியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.