கொழும்பில் இடம்பெற்ற மகா சிவராத்திரி..!

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்து ஆலயங்களில் இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது சிவபெருமானுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

இதில் 1000இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.