கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து 06 பேர் பலி!!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.இந்த அனர்த்தத்தில் பலர் சிக்கியுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயம் அடைந்த 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.குறித்த பகுதி பெருமளவு அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.