உலகெங்கும் இன்றைய தினம் காதலர் தினத்தை இளைஞர்கள் கொண்டாடி வரும் நிலையில், பிரான்சும்- கேரளாவின் இரு உள்ளங்களை இணைந்ததை பார்க்கப் போகிறோம்.
பிரான்ஸ் டூ கேரளா
பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஏழு வயதேயான மரியம் சோபியா லட்சுமிக்கு அவரை பார்த்தவுடன் ஈர்ப்பு.கிருஷ்ணன் வேடமணிந்து கதகளி நடனமாடிய சுனிலின் கண்கள் லட்சுமியை சுண்டி இழுத்தன, அவருக்கு வயது 21, இச்சம்பவம் நடந்தது 1988ம் ஆண்டு.ஏற்கனவே இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டால் ஈர்க்கப்பட்ட லட்சுமியின் பெற்றோர் மகன், மகளுக்கு லட்சுமி, நாராயண் என பெயர் சூட்டியிருந்தனர்.தொடர்ந்து சுனிலும் குடும்ப நண்பராக மாறினார். வருடங்கள் செல்ல செல்ல, தனது 15வது வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதற்காக லட்சுமி இந்தியா வந்துள்ளார்.இருவரும் பேசிப்பழக காதல் மலர்ந்துள்ளது, அன்றைய நிகழ்வுகள் இன்று நினைத்தாலும் பூரிப்பாக உள்ளது என நெகிழ்கிறார்கள் இருவரும்.இவர்களது திருமணத்துக்கு லட்சுமி வீட்டில் பச்சைக்கொடி காட்டினாலும், சுனிலின் உறவினர்கள் எதிர்த்துள்ளனர்.வெளிநாட்டவரின் கலாச்சாரம் வேறு, உங்களது திருமண பந்தம் எந்தளவு வரை நீடிக்கும் என தெரியவில்லை என காரணங்களை கூறினாலும் சுனிலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பரதநாட்டியத்தின் மீதும், நம் பண்பாட்டின் மீதும் லட்சுமி கொண்ட ஆர்வம் இவர்களது காதலை அதிகப்படுத்தியதே தவிர எள்ளவும் குறையவில்லை.தொடர்ந்து இருவரும் மணமுடித்துக் கொண்டு காதல் வாழ்க்கையை ரசித்து வாழ்கின்றார்களாம். இருவரும் இணைந்தே பல மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள், லட்சுமி இதுவரையிலும் எட்டு கேரள படங்களிலும் நடித்துள்ளாராம்.
Kalashakthi எனும் நடனப்பள்ளியை நடத்தி வரும் இக்காதல் ஜோடியின் இளம் மாணவர்கள், நிறைய திருவிழாக்களில் பரிசுகளை வென்று அசத்தி வருவதாக கூறுகின்றனர்.