தேர்தல் தோல்வியின் எதிரொலி: லண்டனுக்கு பறந்து போன சந்திரிக்கா!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக பிரித்தானியா நோக்கிப் பயணமாகியுள்ளார்.கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தனது அதிகாரமிக்க அத்தனகல்ல பிரதேசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டணிக்கு கிடைத்த பாரிய தோல்வியினால் மனவிரக்தியடைந்த சந்திரிக்கா, பிரித்தானியா நோக்கி பயணமாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அத்தனகல்லவின் அதிகாரத்தை மஹிந்த தலையைிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்தனகல்ல பிரதேச சபையின் 45.91% வீத வெற்றியை பொதுஜன பெரமுனவினால் வெற்றியீட்டப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் 24.37% வீத வெற்றியை ஐக்கிய தேசிய கட்சி வென்றுள்ளது.இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி, தனது மகனான விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் அவர் பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.தென்னிலங்கையில் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.