கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
அந்தப் பாடலில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தாலும், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள்.
இந்த நிலையில், பிரியா பிரகாஷுக்கு எதிராக ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் அமைந்துள்ளது என முகமது அப்துல் முக்கித் என்பவர், படத் தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷ் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். பிரியா மீது புகார் தொடுக்கப்பட்டுள்ளது, சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.