பிரித்தானியாவை உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தென் மேற்கு லண்டனில் உறவினர் இளம்பெண்கள் இருவரை கடத்தி, கற்பழித்து, அதில் ஒருவரை கொடூரமாக கொலை செய்த நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட முஜாஹித் அர்ஷித் என்ற 33 வயது நபருக்கு தமது மருமகள் 20 வயதான செலின் டூக்ரான் மீதும் இன்னொரு இளம்பெண் மீதும் தீராத மோகம் இருந்து வந்துள்ளது.

இது வெறியாக மாறவே கடந்த ஆண்டு யூலை மாதம், சந்தர்ப்பம் வாய்த்த ஒரு நாள் கிங்ஸ்டனில் உள்ள குடியிருப்பில் வைத்து முஜாஹித் குறித்த இளம்பெண்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

பின்னர் சுயநினைவை இழந்த இருபெண்களையும் தமது காரில் கடத்தி சென்றுள்ளார்.

முஜாஹிதுக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் இருவரையும் கொண்டு சென்று அங்கே தமது மருமகள் டூக்ரானை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் கழுத்தை கத்தியால் கிழித்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். சடலத்தை குளிர்சாதனப்பெட்டிக்குள் மறைவு செய்துள்ளார்.

மட்டுமின்றி டூக்ரானுடன் கடத்தப்பட்ட 14 வயது சிறுமியையும் அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனிடையே ஆர்ஷித்தின் பார்வையில் இருந்து தப்பி குடும்பத்தாருக்கும் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

குற்றுயிராக இருந்த அவரை பொலிசார் வந்து மீட்டுள்ளனர். ஆனால் அதேநேரம் ஆர்ஷித் அங்கிருந்து தமது மனைவியை சந்திக்க சென்றிருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆர்ஷிதை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குற்றவாளி முஜாஹித் அர்ஷித்துக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.