கரும்பு ஜூஸ் தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும்.
கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.
வைட்டமின் சி மிகுதியாக கரும்பு சாறுகளில் காணப்படுகிறது, இது தொண்டை புண் குணமாக உதவுகிறது. கரும்பு சாறு என்பது வைரஸ்கள் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடியது.
கரும்பு சாறு இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.