உதைப்பந்தாட்ட நடுவர் மீது வாள் வெட்டு!! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

யாழ் மாவட்டத்தின் இளவாளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் சந்தி, அராலி – தெல்லிப்பளை வீதியில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில்,  அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று(14.02.2018) இரவு 7.30 அளவில் இடம்பெற்றது. உரும்பிராயைச் சேர்ந்த, 58 வயதுடைய ஜெயக்குமார் என்பவரே மேற்படி வாள்வெட்டுக்குள்ளாகிப் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வாள்வெட்டுக் கும்பலே வீதியால் பயணித்த கால்பந்தாட்ட நடுவர் மீது வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் இளவாளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.