இந்தியாவில் மணப்பெண்ணுடன் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் அருகே உள்ள பர்ரா என்ற இடத்தில் கடந்த புதன் திருமண் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இளைஞர் மணப்பெண்ணுடன் சேர்ந்து இருக்கும் படி செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.
இதைக் கண்ட மணப் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுவிட்டது.
கைகலப்பை தடுக்க முயன்ற மணமக்களுக்கும் அடி விழுந்தது. மணமேடையிலிருந்து மணக்கோலத்தில் ஓடி வந்த இளைஞர் தலைப்பாகையை கழற்றிவிட்டு தாக்குதலை தடுக்க முயன்றார்.
அதன் பின் உறவினர்கள் மணமக்களை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்றனர்.