ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுயமாக பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான ஓர் தேர்தல் தோல்வி ஏற்பட்டிருந்தால், அந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியிருப்பார்கள் எனவும் கருணா தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பலவந்த அடிப்படையில் பதவி விலக்க வேண்டியதில்லை எனவும், அவர்களே தன்னார்வ அடிப்படையில் பதவி விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.