தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வருவதற்கு முன்னரே தனக்கான பாதுகாப்பை கோரியமை தொடர்பான விடயம் சக உறுப்பினர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர சபை வேட்பாளராக களமிறங்கிய உறுப்பினர்களில் ஒருவர், தேர்தலில் போட்டியிட்டு தனது வட்டாரத்தில் வெற்றியீட்டியுள்ளார்.
பின்னர் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே தமது கட்சித் தலைமையிடத்தில், தான் வென்றுவிட்டதாகவும் உடனடியாக தனக்கான பாதுகாப்பை வழங்குமாறும் கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சங்கடத்துக்குள்ளான கட்சித் தலமை தற்போது இவை சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளது.
இருந்தாலும் குறித்த உறுப்பினருக்கு தற்போது கட்சித் தலமைகளால் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தனது பாதுகாப்பை விரைவுபடுத்துமாறு கோரியுள்ளார். இந்தவிடயத்தில் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இவ் விடயம் ஏனைய சக உறுப்பினர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.