தம்பியைக் காப்பாற்ற மாட்டுடன் போராடிய `துணிச்சல்’ சிறுமி!

சீறிப்பாய்ந்துவந்த மாட்டிடம் இருந்து தனது இரண்டு வயது  தம்பியை எட்டு வயது சிறுமி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

brave girl viral video

கர்நாடக மாநிலம் ஹன்னவர் தாலூக்காவிலுள்ள நவிலக்கோன் கிராமத்தில், எட்டு வயது சிறுமி தன்னுடைய இரண்டு வயது தம்பியுடன் சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ அதிவேகமாக  ஓடிவந்த மாடு, அச்சிறுவனை முட்டித்தள்ள முயன்றது. சீறிப் பாய்ந்த மாட்டைப் பார்த்து சற்றும் பயப்படாத அச்சிறுமி மாட்டுடன் மல்லுக்கு நின்று போராடி தன் தம்பியை மீட்டார். சிறுமி தனது சமயோசித புத்தியைப் பயன்படுத்தி துணிவாகச் செயல்பட்டதால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.  தம்பியைக் காப்பாற்றித் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த அறைக்குள் சிறுமி சென்ற பின்னர்தான் வீட்டில் இருந்தவர்களுக்கு நடந்த சம்பவம் பற்றித் தெரிய வந்தது.  பின்னர் அவர்கள் வீட்டின் வெளியே சுற்றித் திரிந்த மாட்டை அங்கிருந்து விரட்டினார். அச்சிறுமியின் வீரதீர செயல் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல்!