நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியும் இன்று இறுதி முடிவுக்கு வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளார். எனினும் தற்போதைய அரசியல் நிலைமைகள் முடிவுக்கு வந்த பின்னர், சந்திப்பதாக தான் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தான் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக் கொள்ள போவதாக கூறியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியினர் மத்தியில் கூறியுள்ளார்.
அப்போது, துமிந்த திஸாநாயக்கவை, ஜனாதிபதி கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.