-
மேஷம்
மேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பிரபலங்கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்த
லங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள். -
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தள்ளிபோன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.
-
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
-
சிம்மம்
சிம்மம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
துலாம்
துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். கனவு நனவாகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
தனுசு
தனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.
-
மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
-
மீனம்
மீனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகள் விஷயத்தில் வளைந்து கொடுத்துப் போங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.