கொடிகாமம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சில காலமாக வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் இன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளாம் போக்கட்டி கொடிகாமம் பகுதியில் வீடுகளில் தேங்காய், சைக்கிள் போன்றவற்றை திருடி வந்த சந்தேக நபர் இன்று காலை 10 மணியளவில் மக்களினால் பிடிக்கப்பட்டு கொடிகாமம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கொடிகாமம் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி இலக்கம் மூலம் முறையீடு செய்யலாம்.
இது தொடர்பாக மேலதிக விசாரணை கொடிகாமம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.