நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….
தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.
பப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….
கண்களைக் குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையைக் கண்களை மூடி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
பாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால், கருவளையம் மறையும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.