அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நல்லிணக்கத் தொலைக்காட்சி அலைவரிசைக்கான கலையகம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நல்லிணக்கத் தொலைக்காட்சி சேவையொன்றை உருவாக்க அரசாங்கம் கடந்த பட்ஜட்டில் நிதியொதுக்கீடு செய்திருந்தது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் தனியான நிர்வாகத்தின் கீழ் நல்லிணக்க தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நேரடி நிகழ்ச்சிகளுக்கான புதிய கலையகத் தொகுதி ஒன்று ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து இதுகாலவரையும் நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கலையகம் நல்லிணக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கலையகமாக மாற்றம் பெற்றுள்ளது.