தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததின் காரணம்?

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததின் காரணம் அதன் மேற்புறம் உள்ள ஸ்பிடெர்மிஸ் பகுதி ஆகும்.

இப்பகுதியில் செல்லுலோஸ் அதிகம் உள்ளது. இச்செல்லுலோஸ் க்யூட்டினைசேஷன் என்னும் ரசாயன மாற்றத்தால் க்யூட்டிகிள் எனும் தண்ணீர் புக முடியாத ஒரு மெல்லிய சவ்வை உருவாக்குகிறது.

க்யூட்டிக்கிள் சவ்வில் மெழுகு போன்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் அதிகக்கார்பன் அணுக்களை கொண்ட ஆல்கஹால் மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இவை தண்ணீரில் கரையாத தன்மை கொண்டவை.

மேலும் வேறெந்த பொருட்களினாலும் வேதிமாற்றம் அடையாத ஹைட்ரோகார்பனாகவும் அமைந்துள்ளது. எனவே தாமரை இலையின் மேலே அமைந்துள்ள இந்த மெழுகு போன்ற சவ்வானது தண்ணீர் ஒட்டாதபடி தடுத்து விடுகிறது.