டைனோசர் காலத்து வினோத உயிரினம் கனேடியக் கடற்கரையில்!!

நோவ ஸ்கோசியாவில் கேப் பிரெரன் பகுதியில் டைனோசர் காலத்தை சேர்ந்த தடிமனான தோல் கொண்ட பிரமாண்டமான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.மிக கடினமான தோல் கொண்ட இந்த ஆமை 360-கிலோ கிராம் எடைகொண்டது. இந்த அரிதான ஆமையை றொன் மக்லியன் என்பவர் கண்டுள்ளார்.அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ள இந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் சார்லட்ரவுனில் உள்ள அட்லான்டிக் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு பகுப்பாய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.கரையில் படகொன்று தலை கீழாக புரண்டு காணப்படுகின்றதென நினைத்து அருகில் போய் பார்த்ததாக றொன் மக்லியன் தெரிவித்துள்ளார்.பாரமான மெசின் கொண்டு ஆமை அசைக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டது.இந்த ஆமை உலகின் மிகப்பெரிய ஊர்வன இனம் எனவும் 900 கிலோ கிராமிற்கும் மேலான எடை கொண்ட இரண்டு மீற்றர்கள் நீளமுடையவை.

எவ்வாறு கேப் பிரெரன் கரையில் வந்துதென அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.