ஊடகங்கள் மூலம் இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த அறிக்கையில் அரசாங்கத்தின் எதிர்கால நிலை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்துவார் என்று, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருந்தன.
எனினும், திடீரென இந்த முடிவை சிறிலங்கா அதிபர் மாற்றியுள்ளார். அதற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.