சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.
தொலைபேசி மூலம் உரையாடிய போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவிடம், மகிந்த ராஜபக்ச கூறியதாகவும், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.