இலங்கையில் உயிர்வாழும் பாம்பு இனங்களில் மிகவும் அழகானதும் அரிய வகையானதுமான பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.’மல்சரா’ என அழைக்கப்படும் ‘பொல்மல் கரவல’ என்ற பாம்பு ஒன்று அண்மையில் குருவிட்ட, தெப்பானவ பிரதேசத்தில் கிடைத்துள்ளதாக தெஹிவளை விலங்கியல் பூங்காவின் கல்வி அதிகாரி நிஹால் செனரத் தெரிவித்துள்ளார்.விஷத்தன்மை குறைந்த இந்த பாம்பை கண்டவுடன் சிலர் கொல்ல முயற்சித்து வருவதாகவும் இந்த பாம்பை கொல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மல்சரா என்ற இந்த பாம்பு இனம் மரங்களை தமது இருப்பிடங்களாக கொண்டுள்ளது.