மிக விரைவில் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!! பிரதமர் பதவியில் மாற்றம் இல்லை!!

இலங்கை அமைச்சரவையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தன்னிடம் கூறியிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார்.