உள்ளுராட்சி சபைகளில் மைத்திரியுடன் கரம் கோர்க்கும் முஸ்லீம் காங்கிரஸ்!!

கிழக்­கில் பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய அறு­திப் பெரும்­பான்மை சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்கு கிடைக்­கா­த­தால் கூட்­டாட்­சியை உரு­வாக்­கு­வது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­கள் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­ற­னர்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வைத் திரட்­டி­னால் முக்­கிய இடங்­க­ளில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய பெரும்­பான்மை கிடைத்­து­வி­டும் என்ற நிலை­யில், முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் உட்­பட அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குழு, அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவை சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­யுள்­ளது.

தேர்­தல் முடிவு உட்­பட சம­கால அர­சி­யல் நிலை­வ­ரங்­கள் தொடர்­பில் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்து கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.