துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞனொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி காட்டில் வைத்தே குறித்த இளைஞன் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த பகுதியில் இருந்து இளைஞனின் சடலத்துடன் துப்பாக்கியொன்றையும் இன்று காலை கரடியனாறு பொலிஸார் மீட்டுள்ளனர்.
கரடியனாறு வெளியாகண்டியைச் சேர்ந்த 19 வயதுடைய கந்தையா பிரகாஸ் என்பரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளவராவார்.
குறித்த இளைஞர் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.