இடுப்பு பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க!

பொதுவாக சில பெண்களுக்கு இடுப்பை சுற்றி கொழுப்புக்கள் படிந்து இடுப்பு பகுதி அகண்டு காணப்படும்.

இதற்கு ஜீம் சென்று தான் குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருந்தப்படியே எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும்.

இடுப்புப் பகுதியைக் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உடற்பயிற்சிகள் நாம் பார்ப்போம்.

கார்டியோ பயிற்சிகள்

கொழுப்புக்களைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் அவசியம். இந்த பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும் செயலை ஊக்குவிக்கும்.

கார்டியோ பயிற்சிகள் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

தினமும் ரன்னிங், ஜாக்கிங், ஸ்கிப்பிங், சைக்கிளிங், மாடிப்படிக்கட்டுக்களை ஏறி இறங்குவது போன்ற அனைத்துமே கார்டியோ பயிற்சிகள் தான்.

அதேப் போல் நீச்சல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கைப்பந்து போன்றவைகளும் கார்டியோ பயிற்சிகளுக்கு நிகரானவைகளாகும்.

ஸ்குவாட்ஸ்

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க ஸ்குவாட்ஸ் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும்.

வீட்டிலேயே இந்த பயிற்சியை தினமும் 12 முறை என குறைந்தது 5 செட் செய்தாலே போதும்.

இதனால் இடுப்பிற்கு கீழே தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் அனைத்தும் கரைவதோடு, கால்களின் வலிமையும் அதிகரிக்கும்.

வாக்கிங் லஞ்சஸ்

இது இடுப்புகளில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைத்து, இடுப்புத் தசைகளை நல்ல வடிவத்திற்கு கொண்டு வர உதவும் பயிற்சிகளுள் ஒன்றாகும்.

இதற்கு 2 டம்பெல் மட்டும் தேவைப்படும். பின் நேராக நின்று கொண்டு கைகளில் டம்பெல்லை பிடித்துக் கொண்டு, ஒரு காலை முன்புறம் எடுத்து வைத்து மண்டியிட்டு, பின் நேரான நிலைக்கு வந்து, மற்றொரு காலை முன்புறம் எடுத்து வைத்து மண்டியிட வேண்டும்.

இப்படி ஒரு செட்டிற்கு 8 முறை என 5 செட்டுகள் செய்ய வேண்டும். இதனால் இடுப்பு பகுதியிலி காணப்படும் கொழுப்புக்கள் கரைந்து விடும்.