’காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. ’அழகென்ற சொல்லுக்கு அதுல்யா’ என்று இவரை புகழ சமூகவலைதளங்களில் பல ஃபேன்ஸ் க்ளப்கள் இருக்கின்றன.
காதலர் தின ஸ்பெஷல் பேட்டிக்காக கேள்விகளோடு அதுல்யாவை தொடர்பு கொண்டால், அதே க்யூட்னஸோடு பதில்கள் பறக்கின்றன.
உங்களுக்கு வந்த புரபோஸல்ல காமெடியானது எது..?
’’நான் காலேஜ் படிக்கும்போது என்னோட ஜூனியர் பையன் எனக்கு புரபோஸ் பண்ணுனான். நான் அவனுக்கு சீனியர்னு தெரிஞ்சும் என்னை விடாம ஃபாலோ பண்ணிட்டு இருந்தான்.
காலேஜ் பஸ்ல எனக்குப் பின்னாடி சீட்ல உட்கார்ந்துகிட்டு ஏதாவது பேசிட்டே வருவான். நான் இறங்கிற ஸ்டாப் வரைக்கும் வந்துட்டு, அப்பறம் அவன் கவர்மென்ட் பஸ் புடிச்சு அவனோட ஏரியாவுக்கு போவான்.
இப்படியே பண்ணிட்டு இருந்தவன், ஒருநாள் ’லவ் யூ’னு சொல்லிட்டான். நான் ‘போடா தம்பி… போய் ஒழுங்கா படி’னு புத்திமதி சொல்லி அனுப்பிவிட்டேன்.’’
முதல் கிஃப்ட் கொடுக்க என்னென்ன மெனக்கெடுவீங்க..?
’’எனக்கு வரப்போற லவ்வருக்கு கொடுக்குற முதல் கிஃப்ட் அவருக்குப் பிடிச்ச மாதிரியும், யூஸ் ஃபுல்லாவும் இருக்கணும்னுதான் நினைப்பேன்.
அதுக்காக அவரோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டு வாங்கித் தர மாட்டேன். நாங்க பேசி, பழகும் போதே அவருக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காதுனு கேட்டு வச்சுபேன். அதுக்கப்பறம்தான் என்னோட முதல் கிஃப்ட்டை கொடுப்பேன். ரொம்ப சர்ப்ரைஸா அந்த கிஃப்டை கொடுக்கணும்னு நினைப்பேன்.’’
லவ் ஓகே ஆனதும் முதல் முதல்ல யார்கிட்ட சொல்லுவீங்க?
’’அம்மா, அப்பாகிட்டதான் சொல்லுவேன். ஏன்னா, அவங்கதான் என் முதல் ஃப்ரெண்ட்ஸ்.’’
புரபோஸலுக்குப் பிறகு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாத்துவீங்களா?
‘’ஃபேஸ்புக் யூஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. கமிட் ஆனா, மே பி மாத்துவேன்.’’
முதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசை..?
’’அப்படியெல்லாம் எந்த இடமும் நான் யோசிக்கலை. ஆனால், தினமும் போட்டோ எடுக்கணும். ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு பண்ணணும்னு ஆசை இருக்கு.’’
எப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்..?
’’இப்படித்தான் பண்ணணும்னு இல்லை. அவங்க பண்றதுல உண்மை இருந்தாலே போதும். அந்த உண்மையை நான் மதிப்பேன். அப்படி பண்ணுனா பிடிக்கும்.’’
நீங்க ஒரு பையன்கிட்ட புரபோஸ் பண்ணணும்னா என்னென்ன விஷயங்கள் எதிர்பார்ப்பீங்க..?
’’இதெல்லாம் இருந்தால்தான் ஒரு பையனை நமக்கு பிடிக்கும் அப்படிங்கிறதை தாண்டி, அந்த பையனோட பேசி, பழகும்போதே நமக்கு பிடிக்கணும். அவங்க அவங்களா இருந்தா கண்டிப்பா எனக்கு பிடிச்சிரும்.’’
முதல் ‘லாங் டிரைவ்’ எங்கே போக விருப்பம்..?
’எங்க போகணும்னு யோசிக்கலை. ஆனா, கார்ல வேகமா போகணும்னு ஆசை. அது ஈ.சி.ஆரா இருந்தாலும் ஓகேதான். ரெண்டு மணி நேரம் கார்ல போயிட்டே இருக்கணும்.’’