பரபரப்பான கட்டத்தில் ஜனாதிபதி?

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன் கொண்டு செல்வதில் ஜனாதிபதி ஆர்வத்துடன் இருப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பது தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஒரு மணிநேரம் வரை கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்கள் முன்வைத்த வினாவொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, குழப்பகரமான அரசியல் நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்து வௌியிட்டு வருகின்றனர்.

எனினும் அவற்றை புறம் தள்ளி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் உத்தியோகபூர்வ கருத்துக்களை மட்டும் கவனத்திற் கொண்டால் மாத்திரமே இந்த சூழ்நிலையில் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியும்.

அதே ​போன்று ஜனாதிபதியைப்பொறுத்த மட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதில் அவர் ஆர்வத்துடன் காணப்படுவதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.