சசிகலா குடும்பம் தான் அதிமுகவை 30 வருடம் மறைமுகமாக இயக்கியது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார்.
சசிகலா குடும்பம் குறித்தும், தான் முன்பு முதல்வராக இருந்தது குறித்தும் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பல முக்கிய தகவல்களை அளித்திருக்கிறார்.
அதன்படி முதல்வராக இருந்த போது சசிகலா குடும்பத்தின் நெருக்கடியை கஷ்டப்பட்டு தாங்கினேன். வேறு நபர்களாக இருந்தால் தற்கொலை செய்திருப்பர் என்று கூறியுள்ளார்.
மேலும் சசிகலா குடும்பத்தினர் 30 ஆண்டுகளாக கட்சியை மறைமுகமாக இயக்கினார்கள். அவர்கள் தான் கட்சியை கட்டுக்குள் வைத்து இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால் துரோகி என பட்டம் சூட்டினர். ஜெயலலிதாவுக்கு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரினேன். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.