கமலை சந்திக்க அனுமதிக்குமாறு அனைவரது காலில் விழுந்து கெஞ்சிய ரசிகர்!

திரைப்பட நடிகரான கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதித்துள்ளதால் தற்போது அவர் பிசியாக உள்ளார்.

சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த அவர் தனது கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் திகதியை அறிவித்தார்.

வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை வெளியிட உள்ளதாகவும், பிப்ரவரி 22 மற்றும் 23-ஆம் திகதிகளில் மக்களைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் அவரது ரசிகர் எனக் கூறி ஒருவர் வருபவர், செல்பவர் என அனைவரது கால்களிலும் விழுந்து, கமலை சந்திக்க அனுமதி வாங்கித்தருமாறு கெஞ்சியுள்ளார்.

இதைக் கண்ட பாதுகாவலர்கள் அவரை அழைத்துச் செல்ல முற்பட்டபோது பொலிசை அழைத்தாலும் நான் கமலைப் பார்க்காமல் செல்ல மாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.

பொலிசார் அந்த இடத்திற்கு வந்த பிறகும் செல்ல மறுத்த அவர், தரையில் படுத்து பிரச்சனை செய்துள்ளார்.