மீள இயங்குகிறது இணையளத்தளம்: பிரித்தானியா அறிவிப்பு

தமது இணையத்தளம் மீள செயற்படுவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

srilankahc.uk என்ற இணையத்தள முகவரி ஊடாக இணையத்தளம் மீள இயங்குவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றில் நேற்று தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சும் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமது இணையத்தளம் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து செயலிழந்திருத்தது என பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தமக்கு அறிவித்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த இணையத்தளமானது, முடக்கப்படவில்லை என பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.